Showing posts with label arasiyal. Show all posts
Showing posts with label arasiyal. Show all posts

Saturday, May 7, 2011

வடிவேலுவின் பயோடேட்டா .........

                                                      பெயர் :  வடிவேலு

சினிமாவில் : வைகைப்புயல்

ஊர் : மதுரை 

தொழில்:  பெற்ற துட்டுக்கு வேலை 

                    செய்வது (அரசியலிலும் ).

செய்தது : மக்கள் மனதில் நகைச்சுவையால் நீங்கா இடம் பிடித்தது.

செய்ய நினைப்பது : தன்னை எதிர்த்தவரை வீழ்த்த நினைப்பது.

தற்போதைய ஆர்வம்: அரசியல்.

பெற்றது : இந்த தேர்தலில் திமுகவின் சிறந்த பேச்சாளர் அந்தஸ்து.

  
விஜயகாந்த்: சினிமாவிலும் அரசியலிலும் ஒரே எதிரி.

அழகிரி : தற்போதைய கடவுள்.


பாராட்டியது: சினிமாவில் விஜயகாந்தை கேப்டன் என்று அழைத்தது.

அனுதாபம் பெற்றது : விஜயகாந்த் ரசிகர்களால் அடி வாங்கியது.

பேராசை :அரசியலில் விஜயகாந்தை ஒழிக்க நினைப்பது.

சொல்ல நினைப்பது : முதலமைச்சர் கலைஞரை சந்தித்து நான் இன்னும் பவராக இருக்கிறேன் என்று .

         
மே 13       :தன்னுடைய பெயரை நிலைநாட்டும் நாள் .    




Wednesday, May 4, 2011

ஆஜராகுவாரா கனிமொழி?

உலகத்திலேயே மிகப்பெரிய ஊழலான 2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்  முதலமைச்சரின் மகள் கனிமொழி.
நாளை மறுநாள் சிபிஐ முன்னால் ஆஜராக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதன் மூலம் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கைதாகிவிட்டனர்.
இதனால் கனிமொழியும் கைதாகலாம் என்று நிலைமை இருந்து வருகிறது.
இதில் ஆஜரானால் ஏற்படும் அவமானம் திமுகவையும்  கலைஞரையேச் சேரும். அப்படி ஆஜராகும் தருவாயில் அவமானத்தால் கலைஞர் அதிர்ச்சியான முடிவை கூட எடுக்கலாம்.

Tuesday, May 3, 2011

" கோ " படத்தின் தாமதம் : அரசியல் சூழ்ச்சியா ?


சமீபத்தில் டைரக்டர் KV ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த "கோ " படம் சமூக அக்கறையுள்ள படம் ஆனால் இந்த படம் தேர்தலுக்கு முன்பே எடுக்கப்பட்டு வெளிவரும் நிலைக்கு வந்தது ஆனால் திரையுலகை தங்கள் கட்டுபாட்டில் வைத்திருக்கும் அதிகார வர்க்கத்தினர் ஏன் படத்தை தேர்தலுக்கு பின் வெளியிட்டனர் இதன்  சூழ்ச்சி என்ன ? தேர்தலை பற்றி படத்தில் வரும் சம்பவங்கள் தான் காரணமா ? அப்படியென்றால் அந்த காட்சிகள் அனைத்தும் உண்மையா?சமுதாயம் எங்கே போய் கொண்டு இருக்கிறது இது போன்ற சம்பவங்களை தடுக்க தேர்தல் கமிசன் கூடுதல் பலத்தை கையில் எடுக்க வேண்டும் மக்கள் முழுமனதுடன் ஆதரிக்கவேண்டும்.

வெல்க இந்தியா!

Saturday, April 30, 2011

கலைஞரின் தில்லு முள்ளு

மக்களை ஏமாற்றுவதில் கலைஞரைப் போல எந்த அரசியல்வாதியாளையும் இருக்க முடியாது.என்று கலாநிதிமாறன் திரையுலகில் காலடி வைத்தாரோ அன்றிலிருந்து தொடங்கியது கலைஞர் குடும்பத்தின் ஆதிக்கம்.கலாநிதி தொடங்கி உதயநிதி ,தயாநிதி ஆகியோர்களின் வருகையால் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் நிலைமை மோசமாகிப்போனது .இவர்கள் வாங்கும் படங்களைவெளியிட  மாநிலத்தில் உள்ள முக்கிய தியேட்டர்களை வாங்கியதோடு மட்டும்மல்லாமல் மற்ற படங்களை வெளியிடமுடியாமல் முட்டுக்கட்டை போட்டனர்.இப்படி அதிகாரத்தை பயன்படுத்தி அராஜகம் பண்ணுகிறார்கள் .இதை சொன்னால் கலைஞர் என் குடும்பத்தார்கள் திரைப்படத்துறையில் ஈடுபட்டால் ஏன் உங்கள் நெஞ்செரிகிறது  என்று வாய் கூசாமல் சொல்லுகிறார்.இது கலைஞரின் சுயநலத்தையே காட்டுகிறது .இது ஒவ்வொரு பொது மனிதனின் கருத்தாகும்.