Sunday, May 8, 2011

கொடநாடு சென்ற ஜெயலலிதா மாயம் ?பரபரப்புச் செய்தி .......

தேர்தல் முடிந்து ஓய்வு எடுக்க கொடநாடு சென்ற அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் இன்று காலை திடிரென்று மாயமானார்.அதிகாலையில் அங்கே வேலை செய்பவர் தேநீர் கொடுக்க சென்றபோது அம்மையாரை காணாததால் பதற்றமடைந்து நின்ற பாதுகாப்பாலர்களிடம் சொன்னார்.அதிலிருந்து அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர் .பின்னர் சென்னைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .உடனே அணைத்து அமைச்சர்களும் கொடநாடு விரைந்தனர் .தமிழகம் முழுவதும் செய்தி பரவியதால் மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டது .போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர் .இன்னும் தேர்தல் முடிவுக்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் இந்த பரப்பரப்பான செய்தியால் மாநிலம் முழுவதும் பதற்றமாக உள்ளது .பஸ்,லாரி உட்பட எந்த வாகனமும் ஓடவில்லை.இது ஆளும் கட்சியின் சதியாக இருக்குமோ என்று தொண்டர்கள் தெருக்களில் போராட்டம் நடத்துகின்றனர் .விஜயகாந்த் ,தா.பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் கொடநாடு சென்றனர் .விஜயகாந்த் இது முற்றிலும் தேர்தல் பயத்தால் திமுகவின் சதி என்றும் இதற்கு மக்கள் கடுமையான தண்டனையே திமுகாவிற்கு கொடுப்பார்கள் என்று தெரிவித்தார்.    
இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தால் தமிழகம் இந்தமாரியான சூழ்நிலையே எதிர்கொள்ளும் .இன்னும் சொல்லப்போனால் இதைவிட மோசமான நிலையே தமிழகம் எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.இது முற்றிலும் ஒரு கற்பனையே . 

No comments:

Post a Comment