Tuesday, May 3, 2011

வானம்- விமர்சனம்

சிம்பு மறுபடியும் பழைய பாணியில் மாறிட்டாரோ என்று நம்மளை யோசிக்க வைக்கிறது .சிம்பு பெரியவரிடம் பணத்தை திருடும் காட்சி ஒரு இரக்கமில்லாத வில்லனை பார்ப்பது போல் தோன்றுகிறது.சம்பந்தம் இல்லாமல் பாடல் காட்சிகள் நம்மளை வெறுப்பேற்றுகிறது.அடுத்ததாக பரத் வழக்கம்போல் ஆடம்பரம் உள்ளவராகவே வருகிறார் .மக்களுக்கு சில காட்சிகளின் மூலம் சில கருத்துகளை சொன்னாலும் படத்திற்கு சம்பந்தமில்லாமலே தோன்றுகிறார்.அப்புறம் சந்தானம் அதிகம் சிரிக்கலாம் என்று போனால் அதிலும் ஏமாற்றம் .அனுஷ்கா இவ்வளது அசிங்கமாக இருப்பாரா என்று கேட்பவர்களுக்கு இந்த படம் ஒரு சான்று.படத்தில் சிறந்த நடிப்பை காட்டும்  ஒரே நபர் பிரகாஸ்ராஜ் . ஒரு இஸ்லாமியரா நடித்து தன் நடிப்பை மேலும் மெருகேற்றி இருக்கிறார் .இறுதியில் அனைவரும் ஒரு மருத்துவமனையில் சேருவதும் படம் அதிலேயே முடிவடைவதும் பழைய படங்களை நினைவூட்டுகிறது .இருதி காட்சியில் சிம்பு நம்மளை அதிர்ச்சி ஆக்கிருக்கிறார்.இரண்டு பாடல்கள் மட்டும் கேட்கும்படி இருக்கிறது.மத்தபடி படத்தை எதிர்பார்த்து போகிறவர்களுக்கு ஏமாற்றமே .

வானம் கோடை வெயிலின் கொடுமை.....

2 comments: